Sunday, January 30, 2011

ஆண்களின் மன நிலை என்று மாறப் போகிறது??????

மனித மனங்களின் வக்கிரங்களை நினைத்து பார்க்கவே கேவலமாக இருக்கிறது ... இன்று மாலை நான் பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது நான் சந்தித்த ஒரு நபரின் உள்ளக் குமுரலையே இங்கே பதிவாக்கி உள்ளேன் .....

பார்க்கவே அவ்வளவு வசீகரம் அந்த முகத்தில்....... ஆனால் கண்ணில் மட்டும் அவ்வளவும் சோகம் ..... அந்த பெண்ணின் பெயர் ரேகா ( ஆனால் சமூகத்தில் விலை மாது  )..

 அடித்து பிடித்து அந்த பேருந்தில் ஏறினேன்... மூச்சடைப்பு ஏற்படும் அளவிற்கு கூட்டம்... சமாளித்து உள்ளே சென்றேன்.. அவ்வளவு கூட்டத்திலும் வசீகரித்தது அவள் அழகு ... ஆண்களுக்கும்  பெண்களுக்கும்  இடையில் பேருந்தின் நடுவே  நின்றிருந்தேன் ... எனதருகில் ரேகாவும்..

ஓட்டுனர் பிரேக் போடும் போதெல்லாம் எனதருகில் நின்றிருந்த அந்த மூன்று ஆண்களும் அவளின் மேலே போய் தாறுமாறாக  மோதினர் .. பிரேக் போடாத சமயங்களிலும்  கூட ...

அவர்களின் பார்வைகள் அவளின் ஜாக்கெட்டுகுள்ளேயே இருந்தன ...
ரேகாவும் அவர்களின் பார்வைகளை கண்டு கூச்சபட்டதாகவே தெரியவில்லை ..இரண்டு நிறுத்தங்களுக்கு  பிறகு எங்கள் இருவருக்கும் ஒரு இருக்கை கிடைத்தது அமர்வதற்கு.. அமர்ந்ததும் அவளிடம் வினவினேன்  இயல்பான எரிச்சலுடன் ஏன் இந்த ஆண்கள் இப்படி செய்கிறார்கள் என்று ...

அதற்கு அவள் அளித்த பதில் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது ...
"" அவர்கள் தான் எனக்கு சோறு போடும் புண்ணியவான்கள் அவங்களை திட்டாதே"" என்றாள்...
நான் அவள் சொல்வது புரியாமல் அவளையே பார்த்தேன் ... என்னை பார்த்து கண்ணை சிமிட்டினாள்.... நான் புரிந்து கொண்டேன் ...

அதன் பின் அவளிடம் பேச்சு கொடுக்காமல் அமைதியாகவே வந்தேன் ... சிறிது நேரம் கழித்து அவளாகவே  அந்த அமைதியைக் கலைத்தாள்..  அதற்கு பின் எங்களுக்குள் நடந்த உரையாடல்
"அம்முவுக்கு ஒரே ஜுரம், டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகணும் ... ஒரு டிக்கெட் கூட மாட்ட  மாட்டிங்குது "
நான் பதில் ஏதும் பேசவில்லை ......
"அம்மு என் பொண்ணு எட்டு மாசம் ஆகுது .. என்னாலதான் என் பாப்பாவுக்கு ஜுரம்"
"நேத்தே  அம்முக்கு கொஞ்சம் ஒடம்பு சூடு இருந்துச்சு.. ஆனா எங்க கவனிக்க விட்டான் அந்த படு பாவி .."

நான் பேசாவிட்டாலும் அவளாகவே எல்லாவற்றையும் கூறினாள்..என்னிடம் பேசி கொண்டிருக்கும் போதே கண்டக்டரும் வந்து தான் பங்குக்கு கொஞ்ச நேரம் அவளிடம் வழிந்து விட்டு சென்றார் ..
 

"நேத்து அம்முவ கட்டுலுக்கு அடியில படுக்க வெச்சுட்டேன் துணி கூட விரிக்காம.. இந்த குளுர்ல தர வேற ஐசு மாறி இருந்துச்சு .. ஜுரம் அதிகம் ஆய்டுச்சு..."

கட்டிலுக்கு அடியிலயா ??...

"எப்போதுமே கஸ்டமர் வரும் போது அம்முவ காயத்திரி கிட்டயோ ராணி கிட்டயோ ( அதே தொழிலில்  இருப்பவர்கள்..) ஒரு மணி நேரம் பாத்துகோனு சொல்லுவேன்.. ஆனா நேத்து அவங்களுக்கும் கஸ்டமருங்க வந்துட்டாங்க .. என்ன பண்றது .. 
அம்முவ கட்டுலுக்கு அடியில படுக்க வெக்க வேண்டியதா போய்டுச்சு ... 
எல்லாம் என் நேரம் பாதியில ஜுரத்துல பாப்பா அழவும் அவன் துண்டக் காணோம் துணியக் காணோம்னு  ஓடிட்டான்.. என் பொழப்பே போச்சு ... 
ஓனர் காசு தர மாட்டேன்னு சொல்லிட்டான்... கையில இருந்த காசையும் வாங்கிக்கிட்டான் .... "

இடையில் அவளின் போன் ஷஷ்டிய நோக்க  சரவண பவ என பாடி அழைத்தது ... எடுத்து பவ்யமாய் காதில் வைத்து
"அண்ணா இன்னும் ஒன்னும் தேரல ... ஒரு இரு நூறு ரூபா குடுண்ணா.. பாப்பாவ டாக்டர் கிட்ட காட்டிட்டு வந்துடறேன் ... " மறுமுனையில் என்ன பதில் வந்தது என்று தெரியவில்லை ..



போனை அணைத்த அவள் திரும்பவும் தொடர்ந்தாள். ஆனால் இப்போது கண்களில் நீர் கோர்த்திருந்ததது.

"கொஞ்சம் கவனிக்காம விட்டு இது பொறந்துடுச்சு. என்ன மாதிரி இதுவும் ஆயிட கூடாது.. என்ன பெத்தவ பண்ண தப்ப நானும் செய்ய கூடாதுன்னு பாக்கறேன். 
நான் எல்லாம் ஒரு நைட்டு போனா ஆயிரக்கணக்கா
கொண்டு வருவேன் ஆனா இந்த பாவி எல்லாத்தையும் புடிங்கிக்குவான் அவன் கண்ணுக்கு தெரியாம ஒளிச்சுவெச்சாதான் காசு பாக்க முடியும் என் புள்ளைய வளர்த்த முடியும்" என்று கண்களில் கண்ணீருடன் பேருந்தின் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சென்றாள்..

இறங்கும் போதும் அதே உரசல்கள், கண்டக்டரின்

வழிசல்...  

கட்டிலுக்கடியில் பெற்ற குழந்தையை விட்டு விட்டு கட்டிலுக்கு மேலே தன் உடம்பை விற்று சம்பாரிக்கும் அந்த தாயின் நிலையை நினைத்தால் ஒரு புறம் கோபம் வந்தாலும் இன்னொரு புறம் பரிதாபமாகவும் இருந்தது ...  

அவள் உடையில் ஆபாசம் இல்லை .. பார்க்கும் அந்த ஆண்களின் கண்களில் மட்டுமே ஆபாசம் இருக்கிறது.. மனம் நிறைய அழுக்கும் வக்கிரங்களையும் வைத்துக் கொண்டு மீசையை முறுக்கிக்கொண்டு  நானும் ஆண் மகன் என்று சொல்லி திரிய வெட்க பட வேண்டும் .. கார்த்திகை மாதங்களில் வெளியில் திரியும் ஐந்தறிவு கொண்ட அந்த நான்கு கால் ஜீவன்களுக்கும் இவனுக்கும் என்ன வித்தியாசம்....
தான் எதிரில் இருக்கும் பெண்ணிற்கும் உணர்வுகள் உண்டு என்பதை எப்பொழுது புரிந்து கொள்ள போகிறான் .. 

பாரத மாதா தொடங்கி எல்லா பெண்ணிற்கும் மதிப்பு பெயரளவில் மட்டுமே ..ஊரில் உள்ள கடவுள்களில் முக்காலும் பெண் கடவுள்களே  இத்தனைக்கும் மேலே ஒவ்வொரு வீட்டிலும் அம்மா என்ற ஒரு கடவுளை வைத்துக் கொண்டு பெண்ணை வெறும் சதை பிண்டமாக பார்க்கும் இந்த ஆண்களின் மன நிலை என்று மாறப் போகிறது??????

24 comments:

மாணவன் said...

வாழ்த்துக்கள் சகோ...

ப்ரியா said...

நன்றி மாணவன் அவர்களே..வருகைக்கு நன்றி..

Anonymous said...

பிரியா நீங்க சொன்னது எல்லாம் சரிதான் நீங்க ஒரு 200 ரூபா குடுத்து அப்படியே வாழ எதாவது வழி சொல்லிருந்தா உங்கள நானும் பாராட்டி இருப்பேன். மத்தவங்கள குறை சொல்லுறத விட்டுட்டு நாம அவங்களுக்கு ஏதாவது பண்ணலாமே... தமிழன் இப்படித்தான் எல்லாருக்கும் நல்ல அறிவுரை குடுப்பான்

ராஜராஜ சோழன் எம்.ஏ ., said...
This comment has been removed by the author.
ப்ரியா said...

கார்த்திகேயன் வருகைக்கு நன்றி !
நீங்கள் குறிப்பிட்டுள்ள படி பணம் கொடுத்து அவளை ஊக்குவிக்க விரும்பவில்லை .... அவள் பாவம் என்றும் சொல்ல வில்லை .. எனது பார்வை அனைத்துமே அந்த பிஞ்சு குழந்தையின் மீது தான்... அதற்காக வாது நீங்கள் சொன்னதை செய்திருக்க வேண்டும் .. பணம் என்பது பணம் இருகின்றவன் மட்டுமே தர கூடிய விஷயம் . அனால் நல்ல கருத்து என்பது சான்றோர்கள் கூற்று .... தமிழன் அனைவரும் சான்றோறாய் இருபது என்னவோ நல்ல விஷயம் தானே. உங்கள் கருத்துகளையும் மதிக்கின்றேன் .. நான் நல்ல ஒரு வேலையில் சேர்ந்த உடன் கண்டிப்பாக இதை செய்கின்றேன்......

Anonymous said...

சகோதரியே தங்களது கருத்துக்கு மிக்க நன்றி.. இன்றைய சுழலில் அறிவுரைகள் ரெம்ப சுலபமா கிடைக்குது... ஆனா நாம அந்த அறிவுரைகள எப்படி செயலாக்கம் பண்ணுறது அப்படின்னு அத பத்தி பேச மாட்டோம் தங்களுக்கு கூடிய விரைவில் நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள்

settaikkaran said...

சகோதரி, நீங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் அன்றாட நிகழ்வுகள். வக்கிரம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இந்த நாணயத்திற்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. பொதுப்படையாக ஆண்களை "மட்டும்" குற்றம் சொல்லாமல், திறந்த மனத்துடன் அனைவரும் இதை அணுகுதல் நலன் பயக்கும். நல்ல பகிர்வு! பாராட்டுக்கள்.

Gokul said...

விபச்சாரத்தை தடுக்க முடியாது ஆனால் முறைபடுத்த முடியும், அதன் மூலம் ஒரு நல வாரியம் அமைத்து இதை ஒரு organized / recognized விஷயமாக செய்யலாம். அதன் மூலமே இவ்வாறான வன்கொடுமைகளை தடுக்க முடியும்.

ப்ரியா said...

வருகைக்கு நன்றி நண்பரே ....

"மட்டும் " என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன் ....

ப்ரியா said...

நன்றி கோகுல் ....
இதை அங்கீகாரமாக செய்யலாம் என்று சொல்கிறீர்களா ..

ராஜராஜ சோழன் எம்.ஏ ., said...

பிரியா விற்கு !
உங்கள் ஆதங்கத்தின் விளைவு இந்த பதிவு என்று நம்புகறேன்! நீங்கள் கூற விரும்புவதை நோக்கும் முயற்சியில் தோல்வியே எனக்கு மிச்சம் ... ஆண்களை குறை கூருவதனாலோ? இல்லை அந்த பெண்ணிற்கு பணம் குடுபதனாலோ? அந்த குழந்தையை தத்து எடுப்பத நாலோ? இதற்கு முடிவு என்பது இல்லை!!! இதை பார்க்கும் தருவாயில் கவிஞரின் வரி நினைவு கொள்கிறது ...." திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது " தப்பு செய்யும் திருடன் மட்டுமே மனம் திருந்தி திருட்டு தொழிலை விட முன் வர வேண்டும்... அதை விட்டு பொருள் பரிகொடுதவனின் அஜாகரதையை குறை கூறவோ ... திருடியவனின் வயிற்று பொழப்பு முறை என்றும் வாதிடவோ முடியாது.... பெண் என்றால் அவளுக்கு ஆணின் துணை அவசியம்... பெண்ணின் துணை இல்லாமல் ஆண்களால் எதையும் செய்யவும் முடியாது .. ஆண்களின் துணை இல்லாமல் பெண்களால் வாழவும் முடியாது...... "திருந்த வேண்டியதும் நாம் தான் ! திருத்த வேண்டியதும் நாம் தான் !!!!."
அடுத்த முறை அந்த பெண்ணை பார்த்தால் அவளால் மற்ற பெண்ணிற்கு நேரிடும் அவல நிலையை முறையாக சொல்லுங்கள்.. அவள் மீது உரசும் ஆண்களை பார்த்தால் தகுந்த அறிவுரை வழங்குங்கள்.. நாம் ஆறறிவு படைத்த மிருகமாக தான் வாழ்கிறோம் என்பதையும் ஒப்பு கொள்கிறேன் .. இனி உங்களுக்காக இப்பணியில் நானும் முழு வீச்சில் இறங்கி முடிந்த வரை பாதிக்க பட்டோருக்காக உதவிட முயற்சிகின்றேன்...... செயலாக்கம் மிகவும் அருமை.. இருந்தும் மனவருத்தத்துடன் ........ ராஜராஜசோழன் ...................

sathishsangkavi.blogspot.com said...

//கட்டிலுக்கடியில் பெற்ற குழந்தையை விட்டு விட்டு கட்டிலுக்கு மேலே தன் உடம்பை விற்று சம்பாரிக்கும் அந்த தாயின் நிலையை நினைத்தால் ஒரு புறம் கோபம் வந்தாலும் இன்னொரு புறம் பரிதாபமாகவும் இருந்தது//

நிறைய பேர் இந்த மாதிரி இருக்காங்க...

அனைவரும் அறிய வேண்டிய கட்டுரை...

வாழ்த்துக்கள்...

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

இதைப்போன்று எத்தனை ரேகாக்கள் உள்ளனர்..
அந்தக்குழந்தையின் நிலை நினைத்து மனம் பதைக்கிறது .

நன்றி பகிர்தலுக்கு .

ப்ரியா said...

வாங்க ராஜ ராஜ சோழன்....
//திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது " தப்பு செய்யும் திருடன் மட்டுமே மனம் திருந்தி திருட்டு தொழிலை விட முன் வர வேண்டும்//
அவளாக விரும்பி அதை ஏற்றுக் கொள்ளவில்லை.அவளாகவே திருந்தினாலும் அதற்குப் பின் அவளின் மேல் படும்பார்வைகள் கேவலமாக தான் இருக்கும்.. திருடனைக் கூட திருந்தி வாழ அனுமதிக்கும் இந்த சமூகம் ஒரு விலை மாதுவை வாழ அனுமதிக்காது.மாதாவுக்கும் மனைவிக்கும் மகளுக்கும் வித்தியாசம் தெரியாத மூடர்கள் வாழும் இவ்வுலகில் உங்களை போன்ற ஓரிருவர் இதை படித்து நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே என் பகிர்தலின் நோக்கம்....நன்றி..

அமர பாரதி said...

இலவச அறிவுரை கேட்க நன்றாக இருக்கிறது. இதில் ஆண்களை குற்றம் சொல்ல என்ன இருக்கிறது அம்மனி? ஒழுங்காக நல்ல வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானம் போதாமல் விபச்சாரம் செய்து அதிக பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒரு பெண் பணம் இல்லாமல் போகவே 200 ரூபாய் கடன் கேட்பதில் ஆண்களை குற்றம் சொல்ல என்ன இருக்கிறது? அழகாக இருக்கும் பெண்ணை பொது இடத்தில் ஆண்கள் பார்க்கத்தான் செய்வார்கள்.
எனக்கு இந்த மொத்த செயலும் உங்களுடைய கற்பனை என்றே தோன்றுகிறது. அங்கும் இங்கும் பிட்டு பிட்டாக படித்து விட்டு உங்களுடைய வறட்டு கற்பனையைக் கலந்து பதிவு "உருவாக்கி" விட்டீர்கள் போல. அந்த பெண் பஸ்ஸில் அதுவும் பழகிய சில நிமிடங்களில் தன்னை ஒரு விபச்சாரி என்று உங்களிடம் சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

வோர்ட் வெரிபிகேஷனை எடுத்து விடவும். அது இருந்தால் பின்னூட்டுவது சிரமம்.

வருண் said...

அவங்க மேலே பரிதாபப்பட்டு நீங்க ஒரு ரூ 200 கொடுத்து உதவுவீங்களானு எதிர்பார்த்தது போல இருக்கு. அதை நீங்க புரிஞ்சுக்காம ஏன் இப்படி அவங்க கஸ்டமர்களை திட்டுறீங்க?

சமீபத்தில் பெங்களூரில் ஒரு 5 ஸ்டார் ஓட்டலில் ஒரு தெலுகு நடிகையும் விபச்சாரம் மாட்டி இருக்கார். நான் 5 ஸ்டார் ஹோட்டல் அறைக்கு வாடகை என்னனு பார்த்தேன் , ஒரு இரவுக்கு 18000 ரூ னு போட்டு இருந்தது!!!

அவங்களுக்கும் ஒரு பங்களா வாங்க வசதியில்லாமல் கஷ்டப்பட்டு அழுறாங்க பாவம்னு வக்காலத்து வாங்கி ஆண் மிருகங்களை திட்டு இன்னொரு பதிவு போடுங்க!

ராஜராஜ சோழன் எம்.ஏ ., said...

முதலில் ப்ரியாவிற்கு !
சமூகத்த பத்தி நீங்க எங்க கவலை படறீங்க ! வாழ்ந்தாலும் ஏசும் ... தாழ்ந்தாலும் ஏசும் உலகம் இது !!! சுய ஒழுக்கம் என்பது முக்கியம் இல்லைங்களா? நம்ம மனசுக்குக்கு விரப்பமில்லாத செயல நாம ஏன் செய்யணும் சொல்லுங்க? பெண்ணா பிறந்தா இப்படி தான் இருக்கணும் ன்னு புராணத்துல சொன்னது கொஞ்சம் நினைவு கூர்ந்து பார்க்கலாமே ? இதே அவள் அழாகா இல்லை என்றால் இப்படி விலை மாது வாக போக வாய்ப்பு குறைவு.... ஆண்டவன் அவளுக்கு கொடுத்த வரப்ரசாதமே இந்த அழகு .. இதை இவள் தவறாக உபையோகிதுல்லாள் என்பதே என் கருத்து.... இதே அழகு கிடைத்த ஐஸ்வர்யா ராய் ... ஒன்றும் இப்படி போகலையே .... இன்று வரை உலகை கலக்கி கொண்டு தான் இருக்கிறாள்........
பின்னூட்டம் இடும் வாசகர்களே..
இது அவள் கற்பனை என்று வைத்து கொண்டாலும் .. அதற்குரிய கருத்துக்களை கூறுங்கள் தோழரே ! இது மாதிரியான பெண்கள் பலர் சமூகத்தில் உள்ளனரே ! பணம் குடுத்த ஒரு சில வினாடிகளில் தன் உடலை காட்டும் பெண் .. இவளின் கருணை பார்வைக்காக ஏன் தனது மனசை காட்டி இருக்க கூடாது.......

சாமக்கோடங்கி said...

திரிக்கப்பட்ட கதை.. ஒன்று காசுக்காக உங்களிடம் அந்தப் பெண் பிட்டு போட்டிருக்க வேண்டும்.. இல்லை இது திரிக்கப்பட்ட கதையாக இருக்க வேண்டும்..

ஏதோ ஆண்கள் மட்டுமே தவறு செய்வது போல எழுதப் பட்டு இருக்கிறது.. இதே போல பெண்களைப் பற்றி ஏதேனும் எழுதினால் புடிச்சு உள்ள போட்டுருவாங்க..

பேருந்தில் முன்னால் அமர்ந்து இருக்கும் பெண்கள் மற்றும் பின்னால் அமர்ந்து வரும் ஆண்கள் இவர்கள் இரு தரப்பிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை.. (இதில் கூட முன்னால் அமர்ந்து வரும் பெண்கள் ஒட்டுனரைப் பெரிதும் தொந்தரவு செய்கின்றனர்). ஆனால் ஆண்கள் உரச வேண்டும் என்பதற்காகவே நடுவில் நிற்கும் பெண்களும், பெண்கள் இங்கு வந்து நிற்பார்கள் என்ற சரியான கணக்கோடு நடுவில் வந்து நிற்கும் ஆண்களும் தான் பிரச்சினையே..

வயிற்றுப் பிழைப்புக்கு ஆயிரம் வழிகள் உண்டு.. ஏன் விபச்சாரத்தை எடுக்க வேண்டும்..?? இதை நியாயப் படுத்துவதை ஒருக்காலும் ஒத்துக் கொள்ள முடியாது.. இந்தத் தொழிலில் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சந்தோஷம் என்று சொன்னால் சிரிப்பு மட்டும் தான் மிச்சம்..

ஜெர்மனியின் தெருக்களில் தினமும் நடக்கிறேன்.. இங்கே எல்லோரும் பணக்காரர்கள்.. வசதியில்லாத ஆண்கள் தெருவில் துணி விரித்துப் பிச்சை எடுக்கின்றனர்.. ஆனால் பெண்களோ அருகில் வந்து கார்டு கொடுத்து விட்டுச் செல்கின்றனர். பிரித்துப் பார்த்தால் ஆடைகள் இல்லாமல் அதே பெண்கள், மற்றும் விலாசம்.. இப்ப உங்க முகத்தை எங்க கொண்டு போய் வேசுக்குவீங்க..?? பெண்களுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் உங்களுக்கு ஒரு கேள்வி.. ஆண்களின் கண்ணியத்தை எந்த அளவு கோல் கொண்டு கணிக்கிறீர்கள்..?? பெண்கள் காட்டினால் அவர்கள் பார்க்கத் தான் செய்வார்கள்.. தவறு எங்கள் ஆடையில் இல்லை உங்கள் பார்வையில் என்று சொல்வது வெறும் வெளிப்பூச்சு..காட்டும் பெண்களிடம் இருக்கிறது காமம்.. இதை மனசாட்சியோடு நடுநிலைமையில் இருக்கும் சகோதரிகள் அனைவரும் ஒத்துக் கொள்வர்.. வளர்ந்த நாடுகளில் பண்பாடு கலாச்சாரம் வேறு.. இங்கே சூரிய வெளிச்சம் வேண்டியே அரைகுறை ஆடை அணிவார்கள்.. குளிர்காலங்களில் இழுத்துப் போர்த்திக் கொண்டு தான் இருப்பார்கள்.. பார்க்கும் ஆண்களும் அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.. சமூகம் அப்படி. ஆனால் பெண்ணை போகப் பொருளாகவே காட்டி வளர்க்கப் படும் நமது சமூகத்தில் ஆண்களைக் குறை கூறுவது ஒத்துக் கொள்ள முடியாது.

//மாதாவுக்கும் மனைவிக்கும் மகளுக்கும் வித்தியாசம் தெரியாத மூடர்கள் வாழும் இவ்வுலகில்//

வன்மையாக கண்டிக்கப் பட வேண்டிய வார்த்தை.. ஒருவரை நோக்கி ஒரு விரல் நீட்டும்போது மீதம் நான்கு விரல்களும் நம்மை சுட்டுகின்றன என்பதை மறவாதீர்.. குறைகள் யாரிடம் இல்லை?? மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள். உலகத்தில் இருக்கும் இதுபோன்ற சிலருக்காக நானும் தலை குனிகிறேன்.. ஆனால் கணவன் வெளியில் சென்ற அடுத்த வினாடியே கணவனின் அண்ணனிடமும் தம்பியிடமும், ஏன் அப்பாவிடமும் கூட உறவு கொள்ளும் பெண்களைப் பற்றி நமது தமிழ் தொலைக்காட்சிகளிலேயே சொல்கிறார்கள்..?? அவர்கள் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா.? ஒருதலைபட்சமான அலசல்.. புண்படுத்தும் வரிகள்..

இவ்வளவு ஏன்?? கல்யாணத்துக்கு முன்னாடியே பெற்றோருக்குத் தெரியாமல் கள்ளக் காதலனை நடுவீட்டில் கூட்டி வந்து கூத்தடிக்கும் பெண்கள் இல்லை என்று நீங்கள் கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்யுங்கள்.. நான் உங்கள் காலில் விழுகிறேன்..
தவறு இருபுறமும் இருக்கிறது. பெண்களை மதிக்கும் சமூகம் இருக்கிறது என்றால் மதிக்கும்படி அவர்கள் நடக்கிறார்கள் என்று பொருள்.. என்னோடு ஒரு கல்யாணம் ஆன பெண் ஜெர்மனி வரை பயணித்தார். அவர் பெயரும் பிரியா தான்.. கை எடுத்துக் கும்பிடத் தோன்றும் நெறி.. அவரும் அவர் குழந்தையும் என்னிடம் பழகிய விதம் அழகு. விமான நிலையத்தை விட்டு வெளியே வரும்போது நான் அந்தக் குழந்தையிடம் சொன்ன வார்த்தை.. "எங்கே போனாலும் இந்தத் தாய்மாமனை மட்டும் மறந்திடாதே.." தெரிகிறதா..? பெண் எப்போது மதிப்பு பெறுகிறார் என்று..? ஓரக் கண்ணைக் காட்டி பார்ட்டியை மடிய வைக்கும் பேர்களுக்காக நீங்கள் பேசுவதை விடுத்து வேறேதேனும் சொல்லுங்கள்.. குழந்தையைக் கட்டிலின் அடியில் வைத்து... இது எவ்வளவு கேவலமான விஷயம்.. நீங்கள் உண்மையாகப் பெண்மையைப் போற்றுபவர் என்றால், அங்கேயே அவளை செருப்பைக் கழட்டி அடித்து இருக்க வேண்டும்.. அதை விட்டு அப்படி ஒரு சதைப் பிண்டம் வெளியே சென்றதையும், அந்தப் பிண்டத்தை சிலர் இடித்ததையும் கூறி ஆண்களை இழிவு செய்தது கண்டனத்திற்குரியது..

நான் வேறு எங்கும் இவ்வளவு காட்டமாக பின்னூட்டியது இல்லை. எல்லாம் உங்கள் நலனுக்கே.. தீயாக இருங்கள்.. உரசுபவர்களைப் பொசுக்குங்கள்.. உங்கள் குழந்தைக்கு உண்மையான தாயாய் இவர் தான் உன் தந்தை என்று அடையாளம் காட்டுங்கள்..

சாமக்கோடங்கி said...

//சேட்டைக்காரன் said...

சகோதரி, நீங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் அன்றாட நிகழ்வுகள். வக்கிரம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இந்த நாணயத்திற்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. பொதுப்படையாக ஆண்களை "மட்டும்" குற்றம் சொல்லாமல், திறந்த மனத்துடன் அனைவரும் இதை அணுகுதல் நலன் பயக்கும். நல்ல பகிர்வு! பாராட்டுக்கள்.
//

ஒரு நாணயத்திற்கு இரண்டு பகுதி உண்டு என்பதை இங்கே நிறைய பேர் உணர்வது இல்லை.. அது தான் பிரச்சினையே..

Anonymous said...

சமகொடங்கி நீங்கள் சொன்னது அனைத்தும் ஆணித்தரமான உண்மை

ராஜராஜ சோழன் எம்.ஏ ., said...

நாங்களும் வந்துட்டோம் ல !
"எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே ! அவள் நல்லவள் ஆவதும் தீயவள் ஆவதும் அண்ணை வளர்ப்பினிலே ! நல்ல அண்ணன் வளர்ப்பினிலே!"
அவளுக்கு சமூகத்தில் கிடைத்த ஓரே உறவு "மாமா" ! அவளிடம் பிடுங்கி திண்ணும் அந்த மாமா ! அவளுக்கு என்னைப்போல் ஒரு அண்ணனோ ? இல்லை நல்லதொரு அண்ணையோ அமைந்திருந்தால் இப்படி அவள் வாழ்க்கை நிலை அமைந்துருக்காது ..... கூட பிறந்த சகோதரிக்கு இந்த மாதிரி நிலை ஏற்பட்டால் கூட பழி சொல்ல வரும் அண்ணன்களை பார்திருக்கெனே தவிர அவளை வாழ வைக்க வேண்டும் என்று நினைக்கும் அண்ணனை பார்த்ததில்லையே ! பிரியா வின் படைப்பில் கூட அந்த பேருந்தில் ஒரு பெண் மட்டும் தான் அந்த மாதிரி என்று சொன்னாள்.. ஆனா அதே பேருந்தில் அவளை உரசும் ஆண்கள் கண்டிப்பாக 10 நபர்களுக்கு மேல் ! இதில் தெரியவில்லையா வக்கிரம் யாரிடம் உள்ளது என்று.. face கூட கழுவாமல் facebook ல் லாக் ஆண் சேயும் ஆண்கள் நிறைய பேர் ... ஏதாவது பெண் கிடைக்காதா? அப்படி கிடைக்கும் பெண்களிடம் வழியும் ஆண்கள்... சரீங்க உங்க சாப்ட்வேர் கம்பெனி people போற dating ல என்ன government approval லோடவ நடக்குது.. இல்லை சும்மா ஹாய் சொல்றதுக்காக அந்த பெண்ணை மகாபலிபுரம் வரைக்கும் அழச்சுட்டு போனனேன் என்று எந்த ஆண்களையாசும் சொல்ல சொல்லுங்க பாப்போம்.... இது கரெக்ட் னா அதும் கரெக்ட் தான் .... தப்பு ஆண்களிடமும் உள்ளது.. அந்த பெண்ணின் வாழ்க்கை முறை தப்பு தான் .. இதற்கு அவள் சூழ்நிலையே காரணம் ... Mr சாமகொடாங்கி ... நான் மறுபடியும் சொல்றேன் " திருந்த வேண்டியதும் நாம் தான் .. திருத்த வேண்டியாதும் நாம் தான்" ... இந்த மாதிரி ஒரு பெண் மனம் திருந்தி வாழ நினைத்தால் கண்டிப்பாக அவளை மணந்துகொள்ள என் மனம் முன் வரும் .... இது திரிக்க பட்ட கதையை இருக்கலாம்.. நான் சொல்வது உண்மை.. என் மணமேடையில் மாப்பிள்ளை தோழனாக உங்களுக்கு இடம் உண்டு.. அன்று தெரிந்து கொள்வீர்கள்.. இந்த ராஜராஜசோழன் யார் என்று?

ராஜராஜ சோழன் எம்.ஏ ., said...

வடநாட்டில் உள்ள அசுத்தங்களை சுட்டி காட்ட தெரிந்த உமக்கு உள் மனதில் உள்ள அழுக்கு தெரிய வில்லையா? எனக்கு ஏற்பட்டது பரிதாபம் இல்லைங்க. அவள திருத்த வேண்டிய கடமை என்னுடையதென்று உணர்கிறேன்..... நீங்கள் சொல்வது போல் இது டெய்லி நடக்கற விஷயம் தான் .. உங்க கண் முன்னாடி நடக்கும் ஒரு தப்பை தட்டி கேட்பதோ திருத்த முயல்வதோ நம்முடைய கடமை அல்லவா தோழரே..

சாமக்கோடங்கி said...

யோவ் சோழா...

என்னய்யா உள்ளருகிரீர்..??

ஒன்றும் புரியவில்லை.. ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன்.. யாரையும் திருத்துவது என் வேலை இல்லை, அதற்கு எனக்கு நேரமும் இல்லை.. அவரவர் சுதந்திரம் அவரவர் கையில்.. திருந்த வேண்டியது அவரவர் பொறுப்பே..

மற்றபடி, நீங்கள் யாரைக் கல்யாணம் செய்து கொண்டாலும் நானும் தங்கையும் அண்ணனும் கண்டிப்பாக கலந்து கொள்வோம்..(நானும் அண்ணனும் இந்தியாவில் இருந்தால்..)

ராஜராஜ சோழன் எம்.ஏ ., said...

தோழா !
இரவெல்லாம் போய் வீடு வீடாக குறி சொல்லும் சாமகொடாங்கிக்கு இதற்கெல்லாம் எங்குள்ளது நேரம் .... ஆனாலும் நல்ல பிட்டு ஒற்றீருமையா ! உங்களையும் பார்த்து ஒரு பெண் கார்டு குடுத்தாள் என்டீரே பாக்கலாம் ? ஹய்யோ ஹய்யோ ? போதும் தோழரே ... இனியும் ஓட்ட விருப்பம் இல்லை.. எனது திருமணதிற்கு வருவதாக கூறியதுக்கு மிக்க மிக்க நன்றி.. என்றும் உன் தோழமைக்கு கடமை பட்டு இருகிறேன் ....

Post a Comment